Ennavale Adi Ennavale Song Lyrics

“Ennavale Adi Ennavale” Song Lyrics From “Kadhalan” Movie composed by A. R. Rahman and Sung by P. Unnikrishnan. The Ennavale Adi Ennavale lyrics.

Ennavale Adi Ennavale Song Lyrics

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும்
மறந்து விட்டேன்

உந்தன் கால் கொலுசில்
அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்

காதல் என்றால்
பெரும் அவஸ்தை என்று
உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்

எந்தன் கழுத்து வரை
இன்று காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்

வாய் மொழியும்
எந்தன் தாய் மொழியும்
இன்று வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதுடி

காத்திருந்தால்
எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிசமும் வருசமடி

கண்கள் எல்லாம்
என்னை பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி

இது சொர்கமா நரகமா
சொல்லடி உள்ள படி
நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்

கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உன்னை கும்பிட்டு
கண்ணடிப்பேன்

கோபுரமே உன்னை சாய்த்து கொண்டு
உந்தன் கூந்தலில்
மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே
உன்னை தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடி கட்டி
அனுப்பி வைப்பேன்

என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதி வைப்பேன்

உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள்
என்றுரைப்பேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும்
மறந்து விட்டேன்

உந்தன் கால் கொலுசில்
அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்

காதல் என்றால்
பெரும் அவஸ்தை என்று
உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்

எந்தன் கழுத்து வரை
இன்று காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்

Leave a Comment