Ennal Mudiyadhu Summa Song Lyrics

Ennal Mudiyadhu Summa Song Lyrics From Aalappirandhavan Movie Starring Sathyaraj, Ambika, and Silk Smitha in Lead Roles.

Ennal Mudiyadhu Summa Song Lyrics In Tamil

ஆ: என்னால் முடியாது சும்மா இருப்பது

என்னால் முடியாது சும்மா இருப்பது

 

ஆ: என்னால் முடியாது சும்மா இருப்பது

என்னால் முடியாது சும்மா இருப்பது

 

ஆ: நல்லவர் பெயரினில் கொடுமைகள் ஆண்டிட கூடாது

நன்மைகள் பெயரினில் தீமைகள் ஆடிட கூடாது

கொடிய மனிதரவர் ஒழியும் வரையில் இங்கு

 

ஆ: என்னால் முடியாது சும்மா இருப்பது

என்னால் முடியாது சும்மா இருப்பது

ஆ: உண்பதும் உடுப்பதும் படுப்பதும்

அனைவரின் அன்றாடம்

கெடுப்பதை தடுப்பதும் கொடுப்பதும்

எந்தன் அன்றாடம்

 

ஆ: உண்பதும் உடுப்பதும் படுப்பதும்

அனைவரின் அன்றாடம்

கெடுப்பதை தடுப்பதும் கொடுப்பதும்

எந்தன் அன்றாடம்

 

ஆ: காட்டிலுள்ள விலங்கினங்கள்

தேவை மட்டும் தேடுது

நாட்டிலுள்ள நம் இனங்கள்

நம்மை இரையாக்குது

ஆ: காட்டிலுள்ள விலங்கினங்கள்

தேவை மட்டும் தேடுது

நாட்டிலுள்ள நம் இனங்கள்

நம்மை இரையாக்குது

 

ஆ: சத்திய சோதனை ஏழைக்குத்தான்

நித்தமும் வேதனை கோழைக்குத்தான்

கொடிய மனிதரவர் ஒழியும் வரையில் இங்கு

 

ஆ: என்னால் முடியாது சும்மா இருப்பது

என்னால் முடியாது சும்மா இருப்பது

 

ஆ: தியாகங்கள் வீரங்கள் ஏழைக்கு

சரித்திரம் என்றென்றும்

துன்பங்கள் துயரங்கள் தொடருது தொடருது

எமை இன்றும்

ஆ: தியாகங்கள் வீரங்கள் ஏழைக்கு

சரித்திரம் என்றென்றும்

துன்பங்கள் துயரங்கள் தொடருது தொடருது

எமை இன்றும்

 

ஆ: துன்பங்களில் துணை நின்றோமே

இன்பங்களில் பங்கெங்கே

அன்பு வெறும் வார்த்தையில்தானா

எங்கள் மீது கிடையாதா

 

ஆ: துன்பங்களில் துணை நின்றோமே

இன்பங்களில் பங்கெங்கே

அன்பு வெறும் வார்த்தையில்தானா

எங்கள் மீது கிடையாதா

ஆ: நமக்கென்று உழைத்திட யாருமில்லை

எமக்கென்று தலைவர்கள் தொண்டரில்லை

கொடிய மனிதரவர் ஒழியும் வரையில் இங்கு

 

ஆ: என்னால் முடியாது சும்மா இருப்பது

என்னால் முடியாது சும்மா இருப்பது

 

ஆ: நல்லவர் பெயரினில் கொடுமைகள் ஆண்டிட கூடாது

நன்மைகள் பெயரினில் தீமைகள் ஆடிட கூடாது

கொடிய மனிதரவர் ஒழியும் வரையில் இங்கு

 

ஆ: என்னால் முடியாது சும்மா இருப்பது

என்னால் முடியாது சும்மா இருப்பது

Movie Name Aalappirandhavan
Song Name Ennal Mudiyadhu Summa
Starring Sathyaraj, Ambika, and Silk Smitha
Music Director Ilaiyaraaja
Singer Malaysia Vasudevan
Lyricist Ilaiyaraaja

Leave a Comment